கோவில்பட்டியில் சுயேட்சை கவுன்சிலர்களை திமுகவினர் டெம்போவில் அழைத்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 8 இடங்களை பிடித்துள்ளது. அதிமுக 5 இடத்திலும், சிபிஐ மற்றும் தேமுதிக தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கோவில்பட்டி நகராட்சிக்கு ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் அதிமுகவும், திமுகவும் சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவை பெறுவதற்கு முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா முடிந்த நிலையில் சுயேட்சை கவுன்சிலர்களை திமுகவினர் டெம்போ வேனில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல மதுரையில் அமமுக கவுன்சிலர்கள் இருவரை சிலர் டெம்போவில் கடத்த முயன்றபோது போலீஸார் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.