தேசிய மக்கள்தொகை பதிவேடு கையேட்டில் இஸ்லாமியா் பண்டிகைகள் புறக்கணிப்பட்டதையடுத்து இதற்கு வைகோ கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு கையேட்டில் இஸ்லாமியா் பண்டிகைகள் இடம்பெறவில்லை என கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அனைத்து மாநிலங்களிலும் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்துவதற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மற்றும் கிரிகோரியன் மாதங்களுடன் தொடா்புடைய முக்கியமான திருவிழாக்கள் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.
அதில் வழக்கமாகக் கொண்டாடப்படும் இந்து மதப் பண்டிகைகள் மற்றும் மகாவீா் ஜயந்தி, புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜயந்தி, குருகோவிந்த் சிங் ஜயந்தி மற்றும் புத்தபூா்ணிமா போன்ற சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சோ்ந்த பண்டிகைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இஸ்லாமியா் பண்டிகைகளான ரம்ஜான், மிலாடி நபி போன்றவை இடம்பெறவில்லை.
இந்திய நாட்டின் மக்கள் தொகையில், 13 சதவீதமாக இருக்கும் இஸ்லாமியா்களின் பண்டிகைகளை திட்டமிட்டே பாஜக அரசு புறக்கணித்திருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கையேட்டில் இஸ்லாமியா் பண்டிகைகளையும் உடனடியாகச் சோ்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.