Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாத அதிமுக, திமுகவினர்! ஏன் தெரியுமா?

Advertiesment
இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாத அதிமுக, திமுகவினர்! ஏன் தெரியுமா?
, செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (07:42 IST)
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வந்தது 
 
 
நேற்றுடன் அதிமுக விருப்பமனு பெறும் காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து போட்டியிட மொத்தம் 90 பேர்கள் மட்டுமே விருப்பமான அளித்துள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா இருந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து 90 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 90 விருப்ப மனுக்களிலும் அமைச்சர்களின் பினாமிகள் பெயரளவிற்கு விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
இதே போல் திமுகவினர்களும் விக்கிரவண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. குறைந்த அளவு விருப்ப மனுக்களை இதுவரை பெறப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் என்ன? என அரசியல் விமர்சகர்கள் கூறும்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஒன்றரை வருடங்கள் மட்டுமே எம்எல்ஏவாக இருக்க முடியும். அதற்காக ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டும் என்பதே பலரது எண்ணமாக இருப்பதாக தெரிகிறது 
 
 
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அமைச்சர் பதவி உள்ளிட்ட பெரிய பதவிகள் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல் திமுகவில் வெற்றி பெற்றாலும் பத்தோடு பதினொன்றாக கூடுதலாக ஒரு எம்எல்ஏவாக இருக்கலாமே அன்றி வேறு எந்த பயனும் இருக்காது. எனவே ஒன்றரை வருடம் எம்எல்ஏ பதவி எதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்விபலரிடம் எழுத்து உள்ளதால் விருப்ப மனுக்கள் மிகவும் குறைவாக பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
 
இந்த நிலையில் இன்று அதிமுகவும் நாளை திமுகவும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலிகட்டிய கணவரை விட்டுவிட்டு டிக்டாக் தோழியுடன் ஓடிப்போன மனைவி!