Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலால் உடைகிறதா கூட்டணி?

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (08:17 IST)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன
 
குறிப்பாக அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் அதிக மாநகராட்சி தொகுதிகளை பெறவேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
உள்ளாட்சி தேர்தலில் சேலம், வேலூர், சென்னை ஆகிய மாநகராட்சி தொகுதிகளை கேட்க பாமக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் சேலம் முதல்வரின் சொந்த தொகுதி என்பதால் அந்த தொகுதி கிடைப்பது சந்தேகம் என்றும் பாமக தரப்பில் இருந்து கூறப்படுகிறது
 
அதேபோல் தேமுதிகவும் சேலம், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய மாநகராட்சி தொகுதிகளை குறி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் உள்ளாட்சியில் உள்ள 25% தொகுதிகளை கேட்கவும் தேமுதிக திட்டமிட்டுள்ளது
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் பெரும்பாலான மாநகராட்சி தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக  கூட்டணியில் உள்ள கட்சிகள் மாநகராட்சி தொகுதிகளை அதிக அளவில் குறி வைத்துள்ளதால் அதிமுக மற்றும் திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
உள்ளாட்சி தேர்தலால் இருதரப்பு கூட்டணி உடையும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் அடுத்து வர உள்ள சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடருமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments