Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் மிசா கைதிதான்: அடித்து கூறிய பாஜக பிரபலம்

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (08:00 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசா கைதியா? இல்லையா? மிசாவில் கைது செய்யப்பட்டவரா? அல்லது மிசா காலத்தில் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டாரா? என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
 
ஒரு தனியார் தொலைக்காட்சி ஆரம்பித்து வைத்த இந்தப் பிரச்னை தற்போது அதிமுக அமைச்சர் வரை சென்றுவிட்டது. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட் ஏற்படுத்தி வருகிறது 
 
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய திமுக ஐடிவிங் மற்றும் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அமைதியாக உள்ளனர். ஸ்டாலின் மிசா கைதிதான் என ஆதாரத்துடன் திமுக தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வராததால் ஸ்டாலின் மிசா கைதி இல்லையோ? என்ற சந்தேகம் பலரது மனதில் உள்ளது
 
இந்த நிலையில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்பவரும், பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான குருமூர்த்தி, ஸ்டாலின் மிசா கைதிதான் என அடித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மைதான். அது எனக்கே தெரியும். அவசர காலம் முடிந்து நடந்த 1977 தேர்தலில், அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்கு நான் பிரச்சாரம் கூட செய்திருக்கிறேன் என்று தெரித்துள்ளார். 
 
குருமூர்த்தியின் இந்த கருத்தால் திமுக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த சர்ச்சையை திமுகவுக்கு எதிரானவர்கள் இன்னும் பெரிதாக்கி கொண்டே செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments