Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆல் செட்; டீலிங் ஓவர்: கூட்டணி கதவை இழுத்து மூடிய ஸ்டாலின்!

Advertiesment
ஆல் செட்; டீலிங் ஓவர்: கூட்டணி கதவை இழுத்து மூடிய ஸ்டாலின்!
, செவ்வாய், 5 மார்ச் 2019 (15:35 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றன. அதில் திமுகவின் கூட்டணி உறுதியாகிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
அதிமுக, கிட்டதட்ட கூட்டணி கட்சிகளை உறுதி செய்துள்ள நிலையில், தேமுதிகவிற்கு வழங்கபப்ட்டும் தொகுதி பங்கீடுகள் மட்டும் இழுபறியில் உள்ளது. மற்றபடி, பாஜக, பாமக என மெகா கூட்டணியை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவுக்கு வந்துவிட்டது. திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  
webdunia
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, சிபிஎம் 2, சிபிஐ 2, மதிமுகவுக்கு ஒரு தொகுதி மற்றும் ராஜ்ய சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் கொங்குநாடு மக்கள் தேசியக கட்சி, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டு கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. 
 
மார்ச் 7 ஆம் தேதியிலிருந்து கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அதை தொடர்ந்து இரண்டு நாட்களில் தொகுதிகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொகுதிப் பங்கீடு முடிஞ்சாச்சு… யாருக்கு எந்த தொகுதி ? –ஸ்டாலின் பதில் !