Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலினுடன் நேரில் வைகோ பேச்சுவார்த்தை – உதயசூரியன் உறுதியாகுமா ?

Advertiesment
ஸ்டாலினுடன் நேரில் வைகோ பேச்சுவார்த்தை – உதயசூரியன் உறுதியாகுமா ?
, செவ்வாய், 5 மார்ச் 2019 (13:29 IST)
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி ஸ்டாலின் வைத்த  நிபந்தனையால் மதிமுக கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் மதிமுகவுக்கு 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா தொகுதி ஒதுக்கியுள்ளனர். இரண்டு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருப்தியடைந்தாலும் ஸ்டாலின் விதித்த மற்றொரு நிபந்தனையால் அதிருப்தியடைந்துள்ளனர். அது திமுகவின் சின்னமான உதயசூரியனிலேயே மதிமுக போட்டியிடவேண்டும் என்பது.

இதனால் அதிருப்தியடைந்துள்ள வைகோ மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ‘திமுகவை எதிர்த்துத்தான் மதிமுகத் தொடங்கப்பட்டது. அப்போதையக் காலத்தில் அதிக உதயசூரியன் சின்னத்தை கேட்டு மதிமுக வழக்குக் கூட தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணியில் வைத்துள்ள நிலையில், நாம் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமா?  என யோசிக்கிறது மதிமுக.

இதனால் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நண்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். அதனால் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுமா இல்லையா என்பது கூடிய விரைவில் தெரியவரும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் இந்த கட்சிக்கு 2 தொகுதிகள்: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்