Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 25-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்.! இந்த 3 பிரச்சனைகளுக்கு கண்டனம்.!!

Senthil Velan
வியாழன், 18 ஜூலை 2024 (09:41 IST)
மின் கட்டண உயர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25ஆம் தேதி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டியும், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில்,  பருப்பு வகைகள் கடந்த சில மாதங்களாக கிடைக்காததை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
 
மேலும் காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் காவிரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்று தர வேண்டிய ஜூலை 25 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமதி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! சிக்கும் அரசியல் புள்ளிகள்.! பாஜக பெண் பிரமுகர் தலைமறைவு..!!
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், விவசாய பெருமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மக்கள் பிரச்சினைக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

இந்தியாவில் அறிமுகமானது OPPO Find X8! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments