Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி கட்சிகளுக்கு எதிரான தீர்மானங்கள்! – தனித்து போட்டியிட தேமுதிக ப்ளானா?

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (13:18 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று நடத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வேகமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் தற்போது கூட்டணியில் உள்ள தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டரீதியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுதல், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு ஆகிய தீர்மானங்களும் அடக்கம். பாஜக ஆளும் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவளித்துள்ளதால் இந்த முறை தேமுதிகவின் கூட்டணி எப்படி இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக தேவைப்பட்டால் தேமுதிக தனித்து போட்டியிடும் என பிரேமலதா கூறியிருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களும் கிட்டத்தட்ட அதை பறைசாற்றுவது போலவே உள்ளதால் தேமுதிகவின் நிலைபாடு குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments