தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (12:33 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் அதிமுக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது என்பதும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இப்போதும் தொடருமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இன்னும் அந்த கூட்டணியில் இருப்பதை உறுதி செய்யவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அடுத்த மாதம் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார் 
 
மேலும் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு புரட்சி தலைவர் என்றால் அது கேப்டன் தான் என்றும் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேப்டன் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார் 
 
அதிமுக கூட்டணியில் தாங்கள் இருப்பதை பிரேமலதா உறுதி செய்யவில்லை என்பதால் தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்லும் என்பது இன்னும் புதிராகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments