Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரை அன்னைக்கே அடிச்சு நொறுக்கியிருப்பேன்! – தேமுதிக பிரமுகர் பேச்சால் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (16:32 IST)
2011 சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தை கை நீட்டி பேசிய அமைச்சரை அடித்திருப்பேன் என தேமுதிக பிரபலம் ஒருவர் தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி அமைத்த நிலையில் 2016ல் தேமுதிக தனியாக மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. பின்னர் தற்போது மீண்டும் மக்களவை தேர்தலால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தேமுதிக தரப்பில் பேசப்படும் விஷயங்கள் தொடர்ந்து அதிமுகவுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக அமைந்து வருகின்றது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது கட்சி தொண்டர்களை தேர்தல் பணிக்கு தயார் செய்து வருகிறது தேமுதிக. இந்நிலையில் இன்று விருதுநகரில் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகரும், தேமுதிக இலக்கிய அணி செயலாளருமான ராஜேந்திரநாத் பேசுகையில் 2011ல் சட்டமன்றத்தில் நான் எம்.எல்.ஏவாக இருந்திருந்தால் விஜயகாந்தை கை நீட்டி பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அப்போதே அடித்திருப்பேன் என பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சியில் உள்ள அமைச்சர் குறித்து தேமுதிக பிரபலம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments