Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

நமக்கு பயந்து கட்டாயப்படுத்தி கட்சி தொடங்குறாங்க! – ஸ்டார் நடிகரை குத்திக்காட்டும் ஸ்டாலின்!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (12:59 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ள மு.க.ஸ்டாலின், திமுகவிற்கு எதிராக சிலரை கட்சி தொடங்க சிலர் நிர்பந்திப்பதாக பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ’அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற வாசகத்துடன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அனிமேஷன் வீடியோ ஒன்றையும் திமுக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “தேர்தலில் Mission 200 என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றிபெற செய்ய வேண்டும். எனது தேர்தல் பரப்புரையை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளேன். தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் “தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை கண்டிப்பாக திமுகதான் வெற்றி பெறும். நமது பலத்திற்கு அஞ்சி சில கட்சிகள் சிலரை கட்டாயப்படுத்தி புதிய கட்சி தொடங்க வைக்கிறார்கள். ஆனால் அவர்களால் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. திமுகவிற்கு எப்போதுமே இரண்டு பலம் உண்டு. ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர்” என்று கூறியுள்ளார்.

சிலரது கட்டாயத்தின் பேரில் கட்சி தொடங்கியுள்ளதாக ஸ்டார் நடிகரைதான் மறைமுகமாக சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசுகிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.. பலூனு.. சட்டென குழந்தையாக மாறிய ராஜேந்திர பாலாஜி! – வைரலாகும் வீடியோ!