ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் தனித்து போட்டியிடப் போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று அறிவிக்கப்பட்டார் என்பதும் அவர் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமான தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக தனித்து போட்டி என அறிவித்துள்ளது. சற்றுமுன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிலும் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.