Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவை உடைக்க திமுக திட்டமா?

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (07:51 IST)
ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியும் அதிக தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணியில் இணைவது தேமுதிகவின் வழக்கமாக உள்ளது 
 
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இரு அணிகளிலும் பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் நான்கு தொகுதிகள் தந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக தற்போது 40 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 15 தொகுதிகள் வரை மட்டுமே தர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் 15 தொகுதிகளுக்கு தேமுதிக ஒத்து வராவிட்டால் அக்கட்சியை உடைக்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
முதல் கட்டமாக சென்னையில் உள்ள மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு திமுக வலை வீசியதாகவும் கிட்டத்தட்ட அந்த நபர் வலையில் சிக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது அதேபோல் தேமுதிகவில் உள்ள முக்கிய பிரமுகர்களை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியும்  நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின் போதே தேமுதிகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் திமுகவால் வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments