Publish Date: Wed, 16 Dec 2020 (13:16 IST)
Updated Date: Wed, 16 Dec 2020 (13:20 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக பிரபல ஒருவர் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் தேமுதிக கட்சியும் சமீபத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தியதோடு கட்சி தீர்மானத்தை வெளியிட்டது.
இந்நிலையில் தேமுதிக வட சென்னை முன்னாள் மாவட்ட செயலாளரான மதிவாணன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் பேசிய அவர் “41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என சொல்வதிலிருந்தே தேமுதிக கட்சியின் நிலை தெரிகிறது. தேமுதிகவில் நடக்கும் விவகாரம் எதுவும் விஜயகாந்துக்கு தெரியாது” என கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தேமுதிகவிலிருந்து ஒருவர் விலகி திமுகவில் இணைந்துள்ளது தேமுதிகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.