Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்: கவுண்ட்டவுன் தொடக்கம்

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (07:05 IST)
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறதை அடுத்து 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் இன்று ஏவப்படுகிறது. சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.41 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று 2.41 மணிக்கு தொடங்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செலுத்தப்படும் இந்த பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது என்றும், இந்த ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கைக்கோள் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மைகளுக்கு தரவுகளை பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்று ராக்கெட் செலுத்தப்படவுள்ள நிலையில் நேற்றே இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

இனி நோயாளிகள் என்ற பெயர் வேண்டாம்.. மருத்துவ பயனாளிகள் என அழைக்கவும்: முதல்வர் ஸ்டாலின்

கல்லூரிகளில் இனி 12 மணி நேரம் வகுப்புகள்: பேராசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments