Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலின் - திவாகரன் திடீர் சந்திப்பு! கூட்டணிக்கு அச்சாரமா?

ஸ்டாலின் - திவாகரன் திடீர் சந்திப்பு! கூட்டணிக்கு அச்சாரமா?
, திங்கள், 2 ஜூலை 2018 (13:07 IST)
தமிழக அரசியல் களம் தற்போது பலமுனைகளில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஒருபக்கம் திமுக, அதிமுகவின் மோதல் தொடர, இன்னொரு பக்கம் தினகரனும் திவாகரனும் புதிய தலைவர்களாக உருவாகியுள்ளனர். அதேபோல் திரைத்துறையில் இருந்து அரசியலில் குதித்துள்ள கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் தேர்தல் வந்தால் யாருடன் யார் கூட்டணி சேர்வார்கள் என்று ஊகிக்கவே முடியாத நிலை உள்ளது. கமல்-ராகுல்காந்தி சந்திப்பு, தேசிய அளவிலான 3வது அணிக்கு முயற்சிக்கும் தலைவர்களுடன ஸ்டாலின் சந்திப்பு, ஆகியவை தற்போதுள்ள கூட்டணியை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
webdunia
இந்த நிலையில் தஞ்சையில் ஒன்றில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மு.க. ஸ்டாலினும் திவாகரனும் சந்தித்து பேசியுள்ளனர். மு.க.ஸ்டாலினும், திவாகரனும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டதோடு அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது. இதுவொரு சாதாரண சந்திப்பா? அல்லது கூட்டணிக்கு அச்சாரமான சந்திப்பா? என்று போக போகத்தான் தெரியும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர்