காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

Mahendran
வியாழன், 11 டிசம்பர் 2025 (15:56 IST)
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய தவறியதற்காக, காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையிலடைக்க உத்தரவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக டி.எஸ்.பி. தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டி.எஸ்.பி.யை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டதுடன், மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் இரத்து செய்தது. நீதிபதி அதே இடத்தில் பணிபுரிவது உகந்ததல்ல என கூறிய நீதிமன்றம், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
 
இதனை தொடர்ந்து, நீதிபதி செம்மல் முதலில் அரியலூர் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. 
 
விசாரணையின் முடிவை தொடர்ந்து, நீதிபதி செம்மலை சஸ்பெண்ட் செய்து உயர் நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments