Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடிக்கிற மழையில், மலை உச்சியில் செல்ஃபி! 100 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்! - உயிருடன் தப்பிய அதிசயம்!

Advertiesment
Maharashtra

Prasanth Karthick

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (14:08 IST)

மகாராஷ்டிராவில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற பெண் அங்கிருந்து தவறி 100 அடி பள்ளத்தில் விழுந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 

 

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் அருவியில் குளிக்க சென்ற குடும்பத்தினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் பலர் உயிர் ஆபத்தை உணராமல் ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.

 

புனேயில் சதாரா மாவட்டத்தில் உள்ள வார்ஜே பகுதியை சேர்ந்த நஸ்ரின் அமீர் என்ற பெண் தனது தோழிகளுடன் அங்குள்ள தோசேகர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு அவர்கள் குளித்து விட்டு மலைச்சரிவில் இறங்கி வந்துள்ளனர். அப்போது போர்னே கட் என்ற இடத்தில் நின்று நஸ்ரின் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி அங்கிருந்த பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.

 

கீழே விழுந்தவர் அங்கிருந்த மரத்தின் கிளை ஒன்றில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் கயிறை கொண்டு ஒருவரை இறக்கி நஸ்ரினை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் மலைமேல் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் சிலர் இவ்வாறாக சென்று ஆபத்தில் சிக்குவதாக வன அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து அதிரடி! 5ஜி சிம்கார்டுகளை அறிமுகப்படுத்திய BSNL!