வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ரேசன் கடை வராமலே ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ள நாமினி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாநில அரசின் நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் நீண்ட தூரம் ரேசன் கடைக்கு பயணித்து வந்து காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் நடைபெற்ற புதிய ரேசன் கடைகள் திறப்பு விழாவில் பேசிய உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி “வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ரேசன் கடைகளுக்கு அலைய முடியாது என்பதால் அவர்களுக்கு நாமினி நியமித்து கொள்ளும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேசன் கடைகளில் இதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தால் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அதை பரிசீலித்து அனுமதி அளிப்பார்.
இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வேறு நபரை நாமினியாக நியமித்து அவர்கள் மூலமாக ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.