Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்ற அதிருப்தி அண்ணன், தம்பிக்குள் இருக்கின்ற பிரச்சனை - அமைச்சர் கே.என் நேரு!

J.Durai
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:43 IST)
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்,
 
தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து, நகராட்சி நிர்வாக துறையும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு முகாம்களை நடத்தி வருகின்றோம்.
 
மேலும், மழைக்காலங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாத வண்ணம் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
திருச்சியை பொறுத்தவரை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம். 
 
எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்ற அதிருப்தி என்பது அண்ணன், தம்பிக்குள் இருக்கின்ற பிரச்சனை.
 
குடும்பத்திற்குள் நடக்கின்ற பிரச்சனை போல தான். குடும்பத்திற்குள் மகிழ்ச்சி வருத்தம் என எல்லாமும் இருக்கும் அது போல தான். பிரச்சனைகளை நாங்கள் சரி செய்து விடுவோம்.
நிச்சயமாக நாங்கள் 100% வெற்றி பெறுவோம் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments