Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினார்கள் - விஜயலட்சுமி வேதனை

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினார்கள் - விஜயலட்சுமி வேதனை
, செவ்வாய், 28 ஜூலை 2020 (15:47 IST)
வாழவே பிடிக்காமல் சாகணும்னு போகிற ஆளின் வாழ்க்கையில் கூட சீமான் மாதிரி ஆட்கள் எப்படி அரசியல் செய்கிறார்கள் என தெரியல என வீடியோ வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி

விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீமான் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.  

இதனை அடுத்து தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தன்னுடைய மரணத்திற்கு பின்பு யாரும் சீமானை விட்டுவிட வேண்டாம் என்றும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்துவாரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை எல்லோரும் காப்பாத்தியிருக்காங்க. நான் நலமாக இருக்கிறேன். உங்களின் அன்பு ஏதோ ரூபத்தில் வந்து என்னை காப்பாற்றியிருக்கிறது. வாழவே பிடிக்காமல் சாகணும்னு போகிற ஆளின் வாழ்க்கையில் கூட சீமான் மாதிரி ஆட்கள் எப்படி அரசியல் செய்கிறார்கள் என தெரியல. 

நான் பிஜேபியின் கைக்கூலி என்று சொல்வது, இது ஏதோ ஒரு கட்சியோட கைக்கூலி என்று சொல்வதை நிறுத்துக் கொள்ளுங்கள். மனிதத்தன்மையுடன் நடக்க முயற்சி செய்யுங்கள். சீமானுடன் முடியவில்லை. அவன் மனுஷனா, மிருகமா என்று எனக்கு புரியவில்லை. 

தயவு செய்து இந்த பிரச்சனைகளை எல்லாம் பாலிடிக்ஸ் பண்ணாதீங்க. ஒருவரின் உயிருடன் விளையாடாதீங்க. நான் விரைவில் குணமாகி வருவேன் என்றார்.
இந்நிலையில் என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுகிறார்கள் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், மூச்சு விடக் கூட முடியாத நிலையிலும் என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுகிறார்கள். இதற்கான கார்ணம் எனக்குப் புரியவில்லை. நான் நாடக போடவில்லை..எனக்குப் பின்னால் அரசியல் கட்சிகள் இல்லை. ..என் அனுமதி இன்றி காயத்ரி ரகுராம் என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று: அரசு மருத்துவமனையில் அனுமதி