Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

மாயமான 7 போலீசார் திரும்பி வந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

Advertiesment
கள்ளச்சாராய வேட்டை

Siva

, திங்கள், 24 ஜூன் 2024 (07:34 IST)
கள்ளச்சாராய வேட்டைக்காக சென்ற ஏழு போலீசார் மாயமானதாக நேற்று தகவல் வெளியான நிலையில் தற்போது அவர்கள் திரும்பி வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராய வேட்டை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும் இந்த கள்ளச்சாராய வேட்டையில் பல ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீசார்களில் ஏழு பேர் திடீரென மாயமானதாக நேற்று தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த ஏழு பேரும் திரும்பி வந்துவிட்டனர்.

அவர்களிடம் செய்த விசாரணையில் ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்ததாகவும் அனைவரும் நலமாக இருப்பதாகவும் எனவே அவர்களைப் பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது