Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக  உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

Siva

, ஞாயிறு, 23 ஜூன் 2024 (07:43 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு என அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மதன் என்பவர் இன்று அதிகாலையில் பலி எனவும், எனவே 56ஆக இருந்த பலி எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மேலும் 159 பேருக்கு  மருத்துவனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 107 பேர், புதுச்சேரியில் ஜிப்மரில்  17 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும்  
சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர், விழுப்புரம் அரசு மருத்துவனையில் 4  பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியை சேர்ந்த ஜெயமுருகன் 4 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவருடைய உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர், போலீசார் முடிவு செய்துள்ளனர்.
 
Edited by Siva
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!