Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரவணா ஸ்டோர் ஓனரும் ஒரு குப்பை தாத்தாவும்: இயக்குனர் வசந்தபாலன்

Advertiesment
சரவணா ஸ்டோர் ஓனரும் ஒரு குப்பை தாத்தாவும்: இயக்குனர் வசந்தபாலன்
, திங்கள், 24 ஜூன் 2019 (20:45 IST)
இயக்குனர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக்கில் ஒரு குப்பை பொறுக்கும் தாத்தா ஒருவர் கூறியதை பதிவு செய்துள்ளார். அந்த தாத்தாவும், சரவணா ஸ்டோர் அண்ணாச்சியும் வியாபாரம் பண்ண ஒன்னா சென்னைக்கு வந்தார்களாம். அதன்பின் இயக்குனர் வசந்தபாலன் பதிவு செய்ததை கீழே படியுங்கள்
 
சென்னை ரங்கநாதன் தெருவருகே குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்த ஒரு தாத்தாவிடம் கேட்டேன்.
“இப்ப சாப்பிடறதுக்கு ஏதாவது கடையிருக்கா”
மேலும் கீழும் பார்த்தார்.
“நீ யாரு” ன்னு கேட்டார்.
“நான் ஒரு சினிமா டைரக்டர்.இப்போ வெயில்ன்னு ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்”
“நான் யாருன்னு தெரியுமா?”
“தெரியாது”
“நானும் சரவணாஸ்டோர்ஸ் அண்ணாச்சியும் ஒன்னா வியாபாரம் பண்ண இந்த தெருவுக்கு வந்தோம். அவன் கெட்டிக்காரன் முன்னேறிட்டான். நான் செலவாளி தோத்துட்டேன். வியாபாரம்ங்கிறத ஒரு சூதாட்டம் தோத்தா கவலைப்படக்கூடாது. அடுத்த வேலைய பாக்கனும். சினிமாவும் சூதாட்டம்தான் பாத்து இருந்துக்கோ” என்றார்
“கண்டிப்பா ஜெயிப்பேன்,நான் பெரிய சூதாடி” என்றேன்
உற்று பார்த்தார்.
“பெழச்சுப்ப போ” என்று கூறிவிட்டு குப்பைகளை எடுக்க நகர்ந்தார். வாழ்வது பிழைப்பது இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா மெல்ல புரிந்தது. வாழ்வேன் என்று மனதில் உறுதியாக நினைத்து கொண்டு மெல்ல நகர்ந்தேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிமை, டயர்நக்கின்னு சொல்லாம இருப்பாங்களா?- மதுரை எம்.எல்.ஏவின் ட்விட்டர் சர்ச்சை