Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடிமை, டயர்நக்கின்னு சொல்லாம இருப்பாங்களா?- மதுரை எம்.எல்.ஏவின் ட்விட்டர் சர்ச்சை

Advertiesment
அடிமை, டயர்நக்கின்னு சொல்லாம இருப்பாங்களா?- மதுரை எம்.எல்.ஏவின் ட்விட்டர் சர்ச்சை
, திங்கள், 24 ஜூன் 2019 (20:44 IST)
மதுரை திமுக எம்.எல்.ஏ ஒருவர் அதிமுகவை “அடிமை,டயர்நக்கி” என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மதுரையின் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன். மதுரையில் உள்ள பழமையான பாலமான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தில் 10 லட்சம் செலவில் வண்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இது குறித்து மதுரை மாவட்ட நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் எழுதிய பழனிவேல் “பாலத்தில் அடிக்கப்படும் வண்ணம் ஒரு குறிப்பிட்ட கட்சி கொடியின் சாயலில் உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் ஒரு கட்சிக்கு விளம்பரம் செய்வது ஏற்புடையது அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த பாலத்தின் புகைப்படத்தையும், கடிதத்தின் புகைப்படத்தையும் ட்விட்டரில் ப்திவிட்டுள்ள பழனிவேல் “பாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது? அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஒரு சேர ஆதரவும், எதிர்ப்பும் வலுத்துள்ளது. சிலர் திமுக ஆட்சியில் இதுபோன்று மக்கள் வரிபணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடிகொள்ளவில்லையா என கேட்டிருக்கிறார்கள். தற்போது இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேகானந்தரின் மறு உருவம் மோடி: சொன்ன தமிழக எம்பி யார் தெரியுமா?