Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி மரணம்! முதல்வர் இரங்கல்!

Advertiesment
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி மரணம்! முதல்வர் இரங்கல்!
, சனி, 2 மே 2020 (19:54 IST)
திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாளுடன்

அதிமுக அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி இன்று மாலை இயற்கை எய்தினார்.

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 67. இதையடுத்து சென்னையில் இருந்த திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லுக்கு விரைந்துள்ளார்.

இதையடுத்து தமிழக முதல்வர் ‘தங்களின் அன்பு மனைவி கண்ணாத்தாள் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், கண்ணாத்தாள் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக அதிமுக பிரமுகர்கள் , தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி