எடப்பாடி பழனிசாமிக்குதான் என் ஆதரவு! – வெளிப்படையாக சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (16:08 IST)
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் எடப்பாடியாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒற்றை தலைமையில் குழப்பம் இல்லாமல் செயல்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிக்கலா அந்த பதவியை ஏற்றாலும் பின்னர் அவர் சிறை சென்றார். அதன்பின் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய அதிமுக ஜெயக்குமார், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என வலியுறுத்தி பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது.

இந்நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவை ஒற்றை தலைமையில் இணைப்பது என்றால் எடப்பாடி பழனிசாமிக்கே தனது ஆதரவு என பேசியுள்ளார். இதனால் விரைவில் மற்ற அதிமுக பிரமுகர்களும் தங்கள் ஆதரவு நிலைபாடு குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments