Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாநிதி மாறனை தோற்கடிக்க தினகரனின் வியூகம்

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (22:29 IST)
அதிமுக வேட்பாளர்களில் ஓபிஎஸ் மகன் உள்பட ஒருசில வேட்பாளர்களை தோற்கடிக்க டிடிவி தினகரன் மாஸ்டர் பிளானை செய்து வருவது போல், திமுகவில் உள்ள ஒருசில முக்கிய புள்ளிகளையும் தோற்கடிக்க தினகரன் திட்டமிட்டுள்ளாராம்.
 
அந்த வகையில் தினகரன் கண்ணில் சிக்கிய முதல் நபர் தயாநிதி மாறன். தயாநிதி மாறன் போட்டியிடும் மத்திய சென்னை தொகுதியில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், துறைமுகம், பெரியமேடு, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம் சமூக  வாக்குகள் கணிசமாக உள்ளதால் முஸ்லீம் கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு  இந்த தொகுதியை டிடிவி தினகரன் ஒதுக்கியுள்ளார். 
 
மேலும் கமல் கட்சியில் இருந்து இந்த தொகுதியில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் போட்டியிட வாய்ப்பு இருப்பதால் அவரும் முஸ்லீம் வாக்குகளை கணிசமாக பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தயாநிதி மாறனுக்கு முஸ்லீம் வாக்குகளே கிடைக்கக்கூடாது என்ற தினகரனின் திட்டம் பலித்துவிடும்போல் தெரிகிறது
 
இந்த தொகுதியில் சென்னை தொழிலதிபர் முனைவர் சாம் பால், பாமக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவரும் தனது வெற்றியை லேசில் விட்டு கொடுத்துவிட மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் பரபரப்பு..!

கேரள பாஜக தலைவர் அறிவிப்பு.. தமிழக தலைவர் அறிவிப்பு எப்போது?

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments