Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாவின் புதிய முதலமைச்சர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (22:26 IST)
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வ்து குறித்து இன்று காலை முதல் ஆலோசித்து வந்த பாஜக தலைமை, சற்றுமுன் புதிய முதலமைச்சரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
 
இதன்படி சபாநாயகர் பிரோமத் சாவந்த் கோவவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம் பா.ஜ.வின் கூட்டணி கட்சிகளான எம்.ஜி.பி. மற்றும் ஜி.எப்.பி. ஆகிய கட்சியை சேர்ந்த  2 பேர் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவாவில் தங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனு கவர்னரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில் பாஜக தலைமை புதிய முதல்வரை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கூட்டணியின் தயவில்தான் பாஜக ஆட்சி நடக்கின்றது என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டிய கட்டாயத்தில் பாஜக நிலைமை கோவாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments