Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் பிரச்சாரத்தின்போது அஜித் பெயரை பயன்படுத்திய டிடிவி தினகரன்

Advertiesment
அஜித்
, வியாழன், 4 ஏப்ரல் 2019 (20:39 IST)
தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் அரசியல் தலைவர்களிடம் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும் பெற்றோர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருவது தெரிந்ததே. அரசியல்வாதிகளும் அவரவர் கட்சியின் பிரமுகர்கள் பெயரை வைப்பதும், சிலசமயம் என்ன குழந்தை என்றே தெரியாமல் ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைக்கும் காமெடியும் நடந்து வருவது உண்டு
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிடிவி தினகரனிடம் ஒரு தொண்டர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்டு கொண்டார். உஷாராக என்ன குழந்தை என்று கேட்டு, ஆண் குழந்தை என்று உறுதி செய்தவுடன் அந்த குழந்தைக்கு அஜித் என்று பெயர் வச்சுட்டா போச்சு' என்று தினகரன் கூறினார்.
 
அஜித் பெயரை தினகரன் உச்சரித்ததும் அங்கிருந்த தொண்டர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். ஒரு திரைப்படம் வெளியாகும்போது அந்த படத்தின் குழுவினர் அஜித் பெயரை தங்கள் படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் அரசியல்வாதிகளும் தற்போது அஜித் பெயரை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒன்றே இல்லை - எம் ஆர் விஜய பாஸ்கர் கிண்டல்