Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஸ்டர் தெர்மாக்கோல் : செல்லூர் ராஜுவை கலாய்த்த தினகரன் எம்.எல்.ஏக்கள்

Advertiesment
மிஸ்டர் தெர்மாக்கோல் : செல்லூர் ராஜுவை கலாய்த்த தினகரன் எம்.எல்.ஏக்கள்
, செவ்வாய், 9 ஜனவரி 2018 (09:56 IST)
சட்டசபை கூட்டத்தில் பங்கு பெற வந்த அமைச்சர் செல்லூர் ராஜூவை தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கிண்டலடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 
வைகை அணையில் நீர் ஆவியாமல் இருக்க அமைச்சர் செல்லூர் ராஜு தெர்மாக்கோலை விட்ட விவகாரம் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இப்போது வரை அதை வைத்தே அவரை பல அரசியல் கட்சியினரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் புடைசூட சட்டமன்றத்திற்கு வந்தார். ஆனால், அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனவே, தினகரன் மட்டும் உள்ளே சென்றுவிட்டார்.
 
எனவே, அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது, சட்டமன்ற கூட்டத்திற்கு கடைசியாக அமைச்சர் செல்லூர் ராஜு வந்தார். அவரைப் பார்த்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கல் ‘மிஸ்டர் தெர்மாக்கோல்’ என அவரை அழைத்து கிண்டலடித்து சிரித்தனர். இதைக் கேட்டும் கேட்காதது போல் தனது கையால் சட்டையை மடித்த படி செல்லூர் ராஜூ உள்ளே சென்றுவிட்டார். 
 
என்ன இருந்தாலும் ஒரு அமைச்சரை இப்படி ராக்கிங் செய்யக்கூடாது என நெட்டிசன்கள் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிவி தினகரனின் ஆர்.கே நகர் வெற்றி செல்லாது? உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை