Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா 8 அடி பாய்ஞ்சிருந்தா நான் 16 இல்ல 16 ஆயிரம் அடி பாய்வேன் - பஞ்ச் பேசும் தினகரன்

எடப்பாடி பழனிசாமி
Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (11:11 IST)
தமிழகத்தில் அராஜகமாக ஆட்சி நடத்தி வருகிறார் என எடப்பாடி பழனிசாமியை தினகரன் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான தினகரன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினகரனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, அவர் ஒரு குட்டி எதிரி என பேசியிருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தினகரன், என்னை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என எடப்பாடி கூறியிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது, ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் 2017 பிப்ரவரி மாதம் சசிகலாவால் முதலமைச்சர் ஆக முடியாதபோது, சசிகலா கூறியதால் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒப்புக்கொண்டனர். அப்போது எடப்பாடியார் 2 வயது குழந்தை போல் என் பாதம் தொட்டு வணங்கினார்.  தற்பொழுது அவர் அதனையெல்லாம் மறந்துவிட்டார் போலும்.
என்னை குட்டி எதிரி என எடப்பாடி கூறியிருக்கிறார். ஆம் நான் குட்டி தான். அம்மாவின் குட்டி நான். அம்மா 8 அடி பாஞ்சிருந்தா நான் 16 இல்ல 16 ஆயிரம் அடி பாய்வேன் என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என தினகரன் ஆவேசமாக பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments