என்ன இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர், அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூடாது: டிடிவி தினகரன்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (09:21 IST)
இன்று தமிழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தி வருகின்றன. பெரும்பாலான வீடுகளில் இன்று கருப்புக்கொடி ஏற்றி பிரதமருக்கு தங்கள் எதிர்ப்பை தமிழக மக்கள் காட்டி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலந்தாழ்த்தும் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே இந்த கருப்புக்கொடி என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
 
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் தங்கள் கட்சியினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். என்னதான் இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர் என்றும் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவது தவறு என்றும் அவர் கருத்து கூறியுள்ளார். 
 
காவிரி மேலாண்மை அமைக்காததால் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டாமல் பாகிஸ்தான் பிரதமருக்கா கருப்பு கொடி காட்ட முடியும் என்று நெட்டிசன்கள் தினகரனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments