Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணவத்தின் உச்சம் தினகரன்! ’ ’அரவணைத்துச் செல்வாரா மு.க ஸ்டாலின் ?’ தங்க தமிழ்ச்செல்வன் கணக்கு என்ன ?

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (14:28 IST)
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ளதுதான்..ஆனால் அரசியல் பரபரப்புகளுக்கும், பிரேக்கிங் நியூஸ்களுக்கும் பஞ்சமே இருந்தது இல்லை.  அந்த வகையில் சில தினங்களாகவே அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தங்க தமிழ்ச் செல்வனைப் பற்றிய பேச்சுகள் ஊடகங்களில் வெளியாகிவந்தன.
அதில் முக்கியமானது : அமமுக தலைவர்  டிடிவி தினகரனை விமர்சித்து , ஒரு ரேடியோவில் பேட்டி கொடுத்திருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். இதன் பிறகு தான் உட்கட்சிக்குள் பிரச்சனை பூதாகரம் ஆனது. 
 
தன்னை கேட்காமல் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்ததாகவும், தன்னை வரம்பு மீறி பேசி , விமர்சித்ததாகவும் அமமுக தலைவர் தினகரன் தங்க தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து ஊடங்கள் தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் மோதலை அம்பலப்படுத்தியது. பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரன் : தங்க தமிழ்ச்செல்வன் என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பார் அடங்கி விடுவார். அவருக்கு மாற்றாய் இன்னோருவரை அமர்த்துவோம்  என்று தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன் : தினகரன் பேச்சு ஆணவத்தின் உச்சம் ! கொள்ளையே இல்லாத கட்சிக்கு எதற்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி என்று கேள்வி எழுப்பினார்.மேலும் கட்சியில் தனி ஒருவராகவே தினகரன் முடிவெடுத்தார். எங்களை மதிக்கவில்லை. இந்த இரண்டாண்டுகளில் , தோல்விகளுடன் நான்(நாங்கள் ) இழந்ததும் அதிகம் என்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இன்று ஸ்டாலின் முன்னிலையில், தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். அப்போது அருகில் செந்தில் பாலாஜி இருந்தார். ஏற்கனவே அமமுகவில் இருந்துதான் செந்தில் பாலாஜியும் திமுகவில் இணைந்து தற்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக எனும் ஜெயலலிதா குருகுலத்திருந்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதாவின் பரம எதிரியான திமுகவில் இணைந்துள்ளார். இதற்கு முன் தானிருந்த அமமுக கட்சியின் தலைவரை ஆவணத்தின் உச்சத்தில் செயல்படுவதாக வரிந்துகட்டிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு, திமுக தலைவர் அரவணைத்துப் பதவியில் அமர்த்துவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் !
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments