சீமான் மன்னிப்பு கேட்டாலும் ஏற்கமாட்டேன் என்றும் அவருக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன் என்றும் டிஐஜி வருண்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி முன்னாள் எஸ்பி வருண்குமார் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது டி.ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல பேட்டிகளில், பொதுக்கூட்டங்களில், சமூக வலைதளங்களில் அவதூராக பேசியுள்ளார்" என்றும் "தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
சீமான் தன் மீது இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும்; அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அருண்குமார், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்க தொழிலதிபர் மூலம் தூது விட்டார், ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை" என்றும் "பொது வெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால், கோர்ட்டில் அதை தெரிவிக்கப்படும்" என்றும் கூறினார்.
ஆனால், "இனிமேல் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்க மாட்டேன். சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். நான் அடுத்த கட்டமாக சிவில் வழக்கு ஒன்றும் தொடர உள்ளேன்" என்றும் தெரிவித்தார்.
"சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன்", "என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை" என்று முடித்தார் அருண்குமார்.