Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யலை: பிகில் விழாவில் விஜய் பேச்சு!

Advertiesment
யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யலை: பிகில் விழாவில் விஜய் பேச்சு!
, வியாழன், 19 செப்டம்பர் 2019 (22:42 IST)
சமீபத்தில் சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் வைத்த பேனர் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே 
 
 
இந்த சம்பவத்திற்கு ஆளும் கட்சியை பல அரசியல்வாதிகள் கண்டித்தாலும் ஒரு சில திரை உலகினர் மட்டுமே இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று ’பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் பேசிய போது இது குறித்த தனது தைரியமான கருத்தை தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது 
 
 
பேனர் சம்பவத்தால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொண்ட விஜய், இது போன்ற சமூகப் பிரச்சினைகளை ஹேஷ்டேக் போடுங்கள் என்றும் சமூகப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்றும் தேவையில்லாத விஷயத்தை ஹேஷ்டேக் செய்து பரப்ப வேண்டாம் என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார் 
 
 
மேலும் சுபஸ்ரீ விஷயத்தில் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களை கைது செய்யாமல், பிரின்டிங் பிரஸ் வைத்து இருப்பவரை கைது செய்துள்ளார்கள் என்று காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் மறைமுகமான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் 
 
 
சுபஸ்ரீ விஷயங்கள் பெரிய நடிகர்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் நிலையில் விஜய் தைரியமாக இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சின் எதிரொலியாக நாளை தமிழக அமைச்சர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா? கேள்வி கேட்ட ரசிகர் – காஜல் அகர்வாலின் அசர வைத்த பதில்