Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

Mahendran
சனி, 28 ஜூன் 2025 (18:10 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், "போதைப் பொருளை விற்றவர்களை கண்டுபிடித்தீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது சீமான், "நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருமே அப்பாவிகள். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் சினிமா உலகில் போதைப்பொருள் பயன்படுத்தவே இல்லையா?" என்று வினவினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "அதானி துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கியதை அனைவரும் அறிவோம். அந்த போதைப்பொருட்களை பயன்படுத்திய இருவரை கைது செய்துவிட்டீர்கள். ஆனால், விற்றவர்களை யார் கைது செய்தார்கள்? போதைப் பொருள் எங்கிருந்து வருகிறதோ, அந்த வேரை வெட்ட வேண்டும். இந்த இரண்டு நடிகர்களை கைது செய்துவிட்டால், போதைப் பொருள் பழக்கம் நின்றுவிடுமா? இந்தியா முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது," என்று தெரிவித்தார்.
 
மேலும், சினிமா வட்டாரத்தில் நடக்கும் போதைப் பொருள் புழக்கம் குறித்துப் பாடகி சுசித்ரா கூட பேசியிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டது இந்த விவகாரத்தில் கூடுதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புல்லட் ரயில் பயணம்.. செமி கண்டக்டர் ஆலை விசிட்! பரபரக்கும் பிரதமரின் ஜப்பான் பயணம்!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்.. பூத் கமிட்டி அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை..!

மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் சில சக்திகள் தடுத்துவிட்டது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..!

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் சஸ்பெண்ட் இல்லை.. விதிகளில் திருத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

ஜி.கே. மூப்பனார் நினைவு தினம்: ஒரே மேடையில் ஈபிஎஸ், அண்ணாமலை, எல்.கே சுதீஷ்..

அடுத்த கட்டுரையில்
Show comments