தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

Mahendran
சனி, 5 ஜூலை 2025 (12:57 IST)
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தலுக்கு பின்னர்தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி' என்ற பெயரில் உள்ள இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால், அதே நேரத்தில், தேர்தலுக்கு பின்னர் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், பா.ஜ.க. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக பேசி வருவது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, சமீபத்தில் அ.தி.மு.க.-வை சேர்ந்த ஒருவர்தான் முதலமைச்சர் என்று அமித்ஷா கூறியபோது, எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவர் குறிப்பிடாமல் இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.
 
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன், "தேர்தலுக்குப் பின்னர்தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்," என்று தற்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments