Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாசிவராத்திரி; வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி!

Advertiesment
Velliangiri
, வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (10:14 IST)
மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு மலையேறி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் உள்ள சுயம்புலிங்கம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் தென்கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பௌர்ணமிக்கு மட்டும் வெள்ளியங்கிரி மலையேறி சுயம்புலிங்கத்தை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மகாசிவராத்திரி நடைபெறும் நிலையில் இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் போருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்வோரிடம் ரூ.20 வசூலித்துக் கொண்டு அதில் ஸ்டிக்கர் ஒட்டி தரப்படும். மலையிலிருந்து கீழே இறங்கும்போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை வனத்துறையிடம் ஒப்படைத்து ரூ.20 ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!