Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்ச வழக்கில் சிக்கிய பெரம்பலூர் துணை வட்டாட்சியர்.. நெஞ்சுவலி என ஏமாற்றி தப்பி ஓட்டம்..!

Siva
புதன், 3 ஜூலை 2024 (11:49 IST)
லஞ்சம் வழக்கில் சிக்கிய பெரம்பலூர் துணை வட்டாட்சியர் நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பிவிட்டதாக கூறப்படுவது அடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். 
 
பெரம்பலூரில் திருமண மண்டபத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்காக 20,000 வாங்கிய துணை வட்டாட்சியர் பழனியப்பன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
 
இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே அவர் திடீரென தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.
 
இதனை அடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். மருத்துவ சிகிச்சையில் இருந்த துணை வட்டாட்சியர் பழனியப்பன் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தப்பிவிட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வட்டாட்சியர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதனை அடுத்து தப்பி ஓடிய துணை வட்டாட்சியர் பழனியப்பனை பிடிக்க போலீசார் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்