Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு..!

Advertiesment
jp natta

Senthil Velan

, சனி, 6 ஏப்ரல் 2024 (11:47 IST)
திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க இருந்த வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாஜக மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர்களும் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்றிரவு திருச்சி வரவுள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.

 
அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..! கச்சத்தீவு மீட்பது உள்ளிட்ட 74 வாக்குறுதிகள்..!!