பாஜக மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் இணைந்துள்ளனர். சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியானது.
இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், பாஜக மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி. நட்டா அறிவித்துள்ளார்.
இக்குழுவில் மத்திய அமைச்சர்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், அர்ஜூன் முண்டா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.