Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”தமிழகத்தை பயமுறுத்தும் டெங்கு”.. பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா??

”தமிழகத்தை பயமுறுத்தும் டெங்கு”.. பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா??

Arun Prasath

, செவ்வாய், 8 அக்டோபர் 2019 (15:42 IST)
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இதனையடுத்து நிரூபர்களுடன் பேட்டியளித்தபோது, டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் முதல் ஐந்து நாட்களுக்கு எந்த பாதிப்பும் இராது, ஐந்து நாட்களுக்கு பிறகு பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளார்.

மேலும், வடசென்னையில் அதிகமான பாதிப்பு இருப்பதாகவும், அந்த பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், கூறினார். அதை தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் இதுவரை தமிழகத்தில் ஒருவர் மட்டுமே இறந்துள்ளதாகவும், மேலு ம் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற வகையில் செயல்படுவது தான் அரசின் நோக்கம் எனவும் கூறியுள்ளார்.

2951 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தலைமையை பாராட்டி பாஜக ட்விட்: எதற்கு தெரியுமா?