Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

Advertiesment
Thilagabama PMK

Prasanth Karthick

, வியாழன், 10 ஏப்ரல் 2025 (14:13 IST)

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டுள்ளது குறித்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாமகவில் கட்சி நிறுவனரான ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் இடையே முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில், தற்போது 2026 கூட்டணி குறித்து இருவருக்கிடையே வார்த்தை மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. தற்போது கட்சி நிறுவனர் ராமதாஸ், தானே தலைவர் பதவியையும் வகிக்கப்போவதாகவும், இனி அன்புமணி செயல் தலைவராக நீடிப்பார் என்றும் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே புதுச்சேரி பாமக கூட்டத்தில் இருவருக்கும் முட்டிக் கொண்ட போதே அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாஸின் காரை மறித்து அன்புமணி பேரை சொல்லி முழங்கி பரபரப்பை ஏற்படுத்தினர். தற்போது ராமதாஸின் இந்த முடிவு பாமகவில் உள்ள அன்புமணி ஆதரவாளர்களை கொதிப்படைய செய்துள்ளது.

 

பாமக பொருளாளரும் அன்புமணி ஆதரவாளருமான திலகபாமா இதுகுறித்து பேசியபோது “பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. பாமக தலைவர் ராமதாஸ் இதுவரை எடுத்த முடிவுகள் சரியானவை. ஆனால் இந்த முடிவு தவறானது” எனக் கூறியுள்ளார்.

 

மேலும் பாமக அன்புமணி ஆதரவாளர்கள் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கு அடுத்து என்ன நடவடிக்கை என்பதை அன்புமணியை சந்தித்து பேச உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Grindr செயலியை தடை செய்யுங்கள்: அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கோரிக்கை