Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டேட்டிங் ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை! Grindr செயலியை தடை செய்ய காவல்துறை கடிதம்!

Advertiesment
சென்னை காவல்

Mahendran

, வியாழன், 10 ஏப்ரல் 2025 (14:06 IST)
போதைப் பொருள்கள் விற்பவர்கள் பத்தில் ஐந்து பேரை Grindr என்ற செயலியை பயன்படுத்துவதால், அந்த செயலியை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்கள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அதே சமயத்தில், தமிழக காவல்துறை தமிழக முழுவதும் சோதனை செய்து, போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
மேலும், போதைப் பொருள் விற்பவர்களது வங்கி கணக்குகளும் முடக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், போதைப் பொருள் வைப்பவர்களில் கைதாகும் பத்தில் ஐந்து பேர் Grindr என்ற செயலியை பயன்படுத்துவதாகவும், எனவே இந்த செயலியை தமிழ்நாடு அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்த கடிதத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு Grindr செயலியை தடை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை வரும் அமித்ஷா.. அதிமுக கூட்டணி உறுதியாகுமா? பரபரக்கும் அரசியல் களம்!