Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை பற்றி யாரும் பேசக்கூடாது : வாய் பூட்டு போட்ட டெல்லி

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (13:14 IST)
ஜெ.வின் மரணம் குறித்து இனிமேல் பொது இடங்களில் யாரும் பேசக்கூடாது என தமிழக அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

 
சமீப காலமாக ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து அதிமுக அமைச்சர்கள் முன்னுப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை பார்த்தோம். அவர் நன்றாக இருக்கிறார். எல்லோரிடமும் பேசினார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரை பார்த்து கையசைத்தார். இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் அதிமுக அமைச்சர்கள் கூறி வந்தனர். 
 
ஆனால், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அப்போலோவில் நான் உட்பட எந்த அமைச்சர்களும் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. சசிகலா தரப்பு கூறியதையே நாங்கள் செய்தியாளர்களிடம் கூறினோம். எங்களை மன்னித்துவிடுங்கள்” எனப் பேசிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 


 

 
அந்நிலையில், நாங்கள் அனைவரும் ஜெ.வை பார்த்தோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். ஆனால், சசிகலா தரப்பினருக்கு பயந்து நாங்கள் பொய் சொன்னோம் என கே.சி.வீரமணி தெரிவித்தார். இப்படி, ஜெ.வின் மரணத்தில் அதிமுக அமைச்சர்களின் முரண்பட்ட பேட்டிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
இந்த விவகாரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் டெல்லியில் புகார் செய்ததாகவும், எடப்படி பழனிச்சாமியை தொடர்பு கொண்ட டெல்லி வட்டாரம், இனிமேல், ஜெ.வின் மரணம் குறித்து யாரும் பொது இடங்களிலோ, பொதுக்கூட்டங்களிலோ பேசக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments