Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ.வின் மரணத்தில் மர்மம் இல்லை - ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் பேட்டி

Advertiesment
Deepak
, புதன், 21 டிசம்பர் 2016 (11:22 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை என அவரின் அண்ணன் மகன் தீபக் பேட்டியளித்துள்ளார்.


 

 
பல வருடங்களாக தனது அத்தை ஜெ.வை சந்திக்க சசிகலா அனுமதி மறுத்தார் என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பலமுறை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.  
 
ஆனால், தீபாவின் சகோதரரான தீபக், ஜெ.வின் இறுதி சடங்கு செய்ய சசிகலாவால் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் சசிகலாவின் கஸ்டடியில் இருப்பதாக செய்திகளும் வெளியாகியது.
 
இந்நிலையில், இன்று காலை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தீபக் “எனது அத்தை ஜெயலலிதா மறைவில் எந்த மர்மமும் இல்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அப்பலோ மருத்துவமனையில் நான் 70 நாட்கள் இருந்தேன். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சில மருத்துவ ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளேன். எல்லாம் முறைப்படியே நடந்தன. எனவே அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை” என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா 29-ஆம் தேதி பொதுச்செயலாளர் உடனேயே முதல்வராகிறார்: நடராஜன் அதிரடி வியூகம்!