Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா 29-ஆம் தேதி பொதுச்செயலாளர்; உடனேயே முதல்வராகிறார்: நடராஜன் அதிரடி வியூகம்!

சசிகலா 29-ஆம் தேதி பொதுச்செயலாளர்; உடனேயே முதல்வராகிறார்: நடராஜன் அதிரடி வியூகம்!

Advertiesment
சசிகலா 29-ஆம் தேதி பொதுச்செயலாளர்; உடனேயே முதல்வராகிறார்: நடராஜன் அதிரடி வியூகம்!
, புதன், 21 டிசம்பர் 2016 (11:09 IST)
வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு முடிந்த உடனேயே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வர உள்ளது போன்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோஷமும் தற்போது அதிமுகவில் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சசிகலா பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல நாளில் முதல்வராக பதவியேற்கலாம் என ஜோதிடர்களிடம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் யார் எப்படி மாறுவார்கள் என்பது தெரியாது. கட்சிக்குள்ளும் சிலர் ஒரு மாதிரியாக பேசுகின்றனர் என்பதால் சசிகலாவின் கணவர் நடராஜன் சசிகலாவை உடனடியாக முதல்வராக கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
அதாவது வரும் 29-ஆம் தேதி பொதுக்குழு முடிந்தவுடனே சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் பதவியேற்றுக் கொள்வார் என்று சொல்கிறார்கள். அதற்கான வேலைகளிலும் நடராஜன் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஜெயித்து விடலாம் என திட்டமிட்டுள்ளனர். அதற்கான தொகுதிகள் கூட முடிவாகிவிட்டதாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.99ல் தொடங்கி பிஎஸ்என்எல் வழங்கும் மூன்று அதிரடி டேட்டா பேக்!!