Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழைய நினைவுகளுக்கு திரும்பிய தீபா: டுவிட்டரில் உருக்கம்!

, வியாழன், 8 பிப்ரவரி 2018 (17:50 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார். அவர் டுவிட்டரில் தனது பழைய நினைவுகள் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தான் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என கூறிக்கொண்டு தமிழக அரசியலில் வலம் வந்தார். ஆனால் அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் வெகுவாக குறைந்துவிட்டது.
 
இந்நிலையில் தான் ஜெயலலிதா குறித்து புத்தகம் எழுதிக்கொண்டு இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது தான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் குறித்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
 
மேலும் தனது பழைய நினைவுகளை உருக்கமாக அதில் பதிவிட்டுள்ளார். எனது தாய் தந்தைக்கு நான் ஒரே மகள்தான். எனது தாத்தா ஜெயராமனுக்கும், பாட்டி சந்தியாவுக்கும் நான் ஒரே பேத்தி, எனது அத்தை ஜெயலலிதாவுக்கு நான் ஒரே மருமகள்.
 
இவர் எனது அண்ணன் மகள் என்று ஜெயலலிதா என்னை அவரது நெருங்கிய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவார். என்னை கைப்பிடித்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்வார். முதல் முறையாக கிரீன் கலர் இம்பாலா காரில் என்னை அழைத்து சென்றார், அதுதான் எனது முதல் கார் பயணம் என்று தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் தீபா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

CH3CH2OH பைக்கை காட்சிப்படுத்திய டிவிஎஸ்